நண்பர் ஒருவர் இந்தியா போனபோது, அவரது நாயை 2 மாதம் பார்த்துக்கொண்டேன்.

அது ஒரு English Mastiff இன நாய். அதன் பெயர் Kobe.

காலடியிலேயே எப்போதும் படுத்திருப்பது, எங்கு போனாலும் பின்னாலேயே வருவது, வெளியே போய் விட்டு வந்தால் குதூகலத்துடன் வாலை ஆட்டுவது, தனது அன்பை வெளிப்படுத்த முகத்தை நக்க முயற்சிப்பது என்று குடும்பத்தில் ஒரு உறுப்பினராக, பிள்ளையாக மாறி விட்டது.

கோபிக்கு பிடித்தமான பச்சை மாட்டிறைச்சி வைத்தால், சந்தோசமாக, பிளேட்டை சுற்றி வந்து குதித்து dance ஆடும்.

ஒரு முறை வீட்டிலேயே மூத்திரம் போய் விட்டதால், கோபமாக, “கோபி, என்ன இது கெட்ட பழக்கம்!!” என்று திட்டவும், வெட்கத்தில், குற்றவுணற்சியில், தலை குனிந்து, சோகமாக மூலையில் போய் நின்று கொண்டது.

பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வாரி அனைத்துக்கொண்டேன்.

Walking, bathroom போக வேண்டும் என்றால், கதவின் பக்கத்தில் குத்து காலிட்டு உக்கார்ந்து கொள்ளும்.

நான் கவனிக்கவில்லை என்றால், செல்ல அதட்டலோடு குலைக்க ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில் நாய் என்று சொல்லவே வாய் கூசியது.

பாசமான ஜீவன்!!

Walking போகும்போது கக்கா போய்விட்டால், அதை plastic bag-ல் அள்ளி, குப்பை தொட்டியில் போட வேண்டும்.

நான் முடிந்தவரை இதை தவிர்த்து விடுவது.

மற்றவர் வீட்டு முன்னால் இருக்கும் அழகான புல் தரையில் கக்கா போய்விட்டு, குடுகுடுவென ஓடி விடுவான்.

ஒரு நாள், ஒரு இந்திய பெண், 35 வயது இருக்கும், வேகமாக கதவை திறந்து எங்களை நோக்கி ஓடி வந்தது. காலை பதினோரு மணி இருக்கும்.

“Hello சார், உங்களது நாயின் கக்காவை, 2 நாளைக்கு முன் நீங்கள் எடுக்கவில்லை. எனது வீட்டு கேமராவில் பதிவாகி உள்ளது.”

“மன்னிக்கவும்!! Plastic bag எடுத்து வரவில்லை.” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

சிலர் நாய் இறந்தவுடன் எதற்காக அழுகிறார்கள் என்று புரிந்தது.

எந்த நாயைப் பார்த்தாலும் சிறிய பயத்துடன் விலகிச் செல்லும் நான், இப்போதெல்லாம், வாஞ்சையோடு, சின்னஞ் சிறு குழந்தையை பார்ப்பது போல் பார்க்கிறேன்.

அய்யாப்பன் நாயுடன் பேசுவதை, தலையை தடவி கொடுப்பதை நினைத்துப்பார்க்கிறேன்.

சாப்பிட்டு முடிக்கும்போது, கடைசி கவளத்தை மணிக்கு போடுவார்.