மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
வாச்சாம கோச்சரமே மனசா என்ற கீர்த்தனையில் தியாகராஜர் இந்த குறளின் பொருளை வைக்கிறார்.
காட்டில் சீதை ஒரு மானை பார்க்கிறாள்.
அதன் வால் புசு புசு என்று முடி நிறைந்து கண்ணை கவர, அதை சடையின் இறுதியில் கோர்த்து அணி செய்ய சவுரி முடியாக்கிட சீதை அந்த மான் வாலை கேட்க, ராமன் அந்த மானின் வாலை மட்டும் கத்தரிக்கும் வகையில் ஒரு அம்பை எய்கிறான்.
முடி நிறைந்த வாலை இழந்து, மானம் கெட்டு வாழ்வதை விட உயிரை விட முடிவு செய்கிறது அந்த மான்.
அம்பு வாலை நோக்கி வர, மான் சட்டென்று கழுத்தை திருப்பி, வாலில் வைத்தது. முதலில் உயிர் போக வேண்டும் அதன் பிறகு வால் (மானம்) போக வேண்டும்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராமன் திகைத்து அந்த அம்பை விட வேகமாக ஒரு அம்பை எய்து முதலில் விட்ட அம்பை முறியடிக்கிறான். மானும், மானமும் காப்பாற்றப்படுகின்றன.


